மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லி - ஹரியானா எல்லையில் போலீசார் குவிப்பு

டெல்லி - ஹரியானா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சிங்கூரில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லி - ஹரியானா எல்லையில் போலீசார் குவிப்பு
x
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்ப வேண்டும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்பது, விவசாயிகளின் கோரிக்கையாகும். பஞ்சாபிலிருந்து, டிராக்டர்களுடன் திரண்டு வந்த விவசாயிகள், சிங்குர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கேயே முகாம் அமைத்து, சமைத்து, விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டம் காரணமாக, டெல்லியின் சிங்குர் எல்லைப்பகுதிகளில், அதிகளவிலான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்