ஒக்கி புயலின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய ஒக்கி புயலின், மூன்றாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஒக்கி புயலின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
x
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ஒக்கி புயலின்போது, உயிரிழந்த மீனவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. 172 மீனவர்களின் படங்களுக்கு சிறுவர் முதல் முதியவர்கள் வரை மீனவ மக்கள் மலர் அஞ்சலி செலுத்தியதோடு மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தங்களது வாழ்வாதாரமான கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்