15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தொடர்பு

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், நெஞ்சை உலுக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன
15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தொடர்பு
x
கடந்த 23ஆம் தேதி, சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக கணவன் மனைவி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், எண்ணூர் காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அங்கு மீட்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியை நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2 மாதங்களில் 400-க்கும் மேற்பட்டோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் என சமூகத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பட்டியலை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்