"கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கூடுதல் கவனம் தேவை" - 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கூடுதல் கவனம் தேவை - 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
x
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு, அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், கொரோனா நோய் தொற்றுக்கான சங்கிலியை உடைக்க வேண்டும் என்றும், கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அண்மைக்காலமாக, சந்தைப்பகுதி, வணிக வளாகம், திருமண மண்டபங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம், சமூக இடைவெளியை மக்கள் சரிவர கடைபிடிக்கவில்லை என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.எனவே, கொரோனா பரவலை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், கொரோனா தடுப்பு விதிகளை மீறும் தனிநபர்கள், திருமணம் நடத்துபவர்கள், மண்டப உரிமையாளர்கள், வணிக வளாக உரிமையாளர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்