எட்டு மாதங்களுக்கு பிறகு மலை ரயில் இயக்கம் - ரயில்வே பணியாளர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சி
எட்டு மாதங்களுக்கு பிறகு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டதால் ரயில்வே பணியாளர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
கொரோனா பரவல் ஊரடங்கால், கடந்த மார்ச் முதல் நீலகிரி மலை ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த, 8 மாதங்களாக சுற்றுலா பயணிகளின்றி ரயில் நிலையங்கள் வெறிச்சோடின. இந்நிலையில் "அவுட் ஆப் லவ் சீசன்- 2ம் பாகம்" என்கிற "இந்தி வெப்" தொடருக்கு மலை ரயிலை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டு, கேத்தி ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு, மலை ரயில் இயங்கியதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story