தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த நிலை உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வங்க கடலில் கடந்த 21-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ந் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்