மருத்துவ உயர் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியாக துரோகம் - திமுக தலைவர் ஸ்டாலின்

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் கூட்டணியாக துரோகம் செய்துவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உயர் படிப்புகளில் 50%  இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியாக துரோகம் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மாணவர்களின் கனவை சிதைத்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவையும் பாழ்படுத்தியுள்ளதாக சாடியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில், பா.ஜ.க. அரசு கடுமையாக வாதிட்டதன் காரணமாக இந்த ஆண்டு, அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி இருந்தால், இடஒதுக்கீடு கிடைத்திருக்கும் என கூறியுள்ள ஸ்டாலின், அமித்ஷாவை அழைத்து அரசு விழா நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை, அரசு மருத்துவர்கள் மீது முதலமைச்சர் பழனிசாமி காட்டவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்