பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் புத்தகம் - பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் குறித்து முடிவு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் புத்தகம் - பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை
x
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகலை ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காமிரேட்ஸ் என்ற புத்தகம் நீக்கப்பட்டிருந்தது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இந்த இருப்பதாக ஏபிவிபி மாணவர் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் பல்கலைக் கழக துணைவேந்தர் மூலம் நியமிக்கப்பட்ட கமிட்டி முடிவு செய்து இந்தப் புத்தகத்தை நீக்கி இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர்,  மாணவர்கள், எழுத்தாளர், இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதையடுத்து,  பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நடப்பாண்டிற்கான பல்கலைக்கழக பாடத்திட்ட குழுக்கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காமரைட்ஸ் புத்தகம் குறித்து வரப்பட்ட மனுக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்