புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயல் "வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்"- சென்னை வானிலை ஆய்வு மையம்

கரையை கடந்த நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் அது மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயல் வலு குறைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
x
இதன் காரணமாக  தமிழகம் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்றுவீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என்றும்,  தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்