அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
x
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக திருவள்ளூர் அருகே அயப்பாக்கத்தில் 12 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டது. இதை காணொலிக் காட்சி மூலமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் கொரட்டூர் மற்றும் வேளச்சேரியில் 22 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபங்களையும் அவர் திறந்து வைத்தார். சோழிங்கநல்லூரில் கட்டப்பட்டுள்ள 32 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதேபோல், 27 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 17 பாலங்களையும்,  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.



Next Story

மேலும் செய்திகள்