நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்
நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்
x
120 அடியை முழு கொள்ளளவாக கொண்ட, மேட்டூர் அணையின், தற்போதைய நீர்மட்டம் 98 புள்ளி 58 அடியாக உள்ளது.பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாக உள்ள நிலையில், தற்போது நீர் மட்டம் 95 புள்ளி 74 அடி உள்ளதுபூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தம் 35 அடியில்,
நீர் இருப்பானது 30 புள்ளி 20 அடி உள்ளது.18 புள்ளி 86 அடியை மொத்த கொள்ளளவாக கொண்ட சோழவரம் ஏரியில், தற்போதைய நீர் இருப்பு 4 புள்ளி 48 அடி மட்டுமே உள்ளது.அதே சமயம் 21 புள்ளி 20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 17 புள்ளி 08 அடியாக தற்போதைய நீர்மட்டம் உள்ளது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போதைய 
நீர் இருப்பு - 21 புள்ளி 22 அடியாக உள்ளதுவீராணம் ஏரியை பொறுத்தவரை, தற்போதைய நீர் இருப்பு 45 புள்ளி 98 அடியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 47 புள்ளி 50 அடியாகும்.


Next Story

மேலும் செய்திகள்