தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
x
இதனால் எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பை, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.
நிவர் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்
புதுச்சேரிக்கு அருகே நிவர் புயல் கரையை கடக்கக் கூடும்
கடலோர பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்
காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்
புதுவை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 100- 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 80- 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்சென்னையில் மழை தொடரும்- ஓரிரூ இடங்களில் மிக கனமழை பெய்யும்


Next Story

மேலும் செய்திகள்