ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளில் சிக்கி இளைஞர்கள் பலரும் தற்கொலை செய்து வந்த நிலையில் இந்த விளையாட்டை தடுக்க தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்திருந்தார்.
தடையை மீறி விளையாடினால் 5000 ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும், பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே தமிழக அரசின் இந்த அவசர சட்டமானது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story