எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பு சேர்க்கை - பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் 15 இடங்கள் பெற்ற மாணவர்கள் பங்கேற்காதது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பு சேர்க்கை - பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்
x
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கிய மருத்துவ படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4 ஆயிரத்து 944 இடங்களுக்கு 5 ஆயிரத்து 441 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளான இன்று தரவரிசைப்பட்டியலில் ஒன்று முதல் 361 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. கலந்தாய்வுக்கு வராத மாணவர்களில் பலர் இரு மாநிலங்களில் இருப்பிடச் சான்றிதழ் பெற்று விண்ணப்பித்திருக்கலாம் என்றும் , கலந்தாய்வில் பங்கேற்றால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் தவிர்த்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்