தொடர் மழை : தண்ணீரில் மூழ்கிய மிளகாய், நெற்பயிர்கள் - காப்பீடு தொகை வழங்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மிளகாய், நெற்பயிர் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நயினார்கோவில், கமுதி, அபிராமம், முதுகுளத்தூர், சத்திரக்குடி, தவளைக்குளம், வலக்கானி, பாண்டியூர் உட்பட பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து சாகுபடி செய்யப்படும் மிளகாய்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக வயல்வெளிகளில் மிளகாய் செடிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள், ஊடுபயிராக வளா்க்கப்பட்ட மல்லி, தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெங்காய செடிகளும் அழிந்துள்ளன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், மிளகாய், உளுந்து வகை பயிா்களுக்கும் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story