மதுரை ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஒரே மாதத்தில் 3-வது முறையாக ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மதுரை ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து
x
மதுரை தெற்கு மாசி வீதியில் பைசர் அகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை மற்றும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக எரிந்துக் கொண்டிருக்கும் தீயில், பல லட்சம் மதிப்பிலான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் எரிந்து நாசமாகியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து  மதுரை விளக்குத் தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே தெற்குமாசி வீதியில் நெருக்கடி மிகுந்த கட்டிடங்களில் இயங்கி வரும் ஜவுளிக்கடைகள் விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே விதிகளை மீறி கட்டியிருந்த கட்டிடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்