சென்னையில் ஒரு காசி... அதிரவைக்கும் பகீர் சம்பவம்
பதிவு : நவம்பர் 21, 2020, 01:48 AM
நாகர்கோவில் காசியை போல், பெண்கள் பலரின் வாழ்க்கையை சீரழித்த ஏரோநாட்டிகல் இன்ஜினியர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பகீர் சம்பவத்தின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்...
இன்ஸ்டாகிராமில் உள்ள பெண்களை குறிவைத்து காதலிப்பது போல நடித்து, அவர்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை மிஞ்சும் வகையிலான சென்னையில் மற்றொரு பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாசமான எஸ்எம்எஸ், படங்கள் வந்துள்ளதை அறிந்த அவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் அத்தனை அம்பலங்களும் வெளிவந்திருக்கிறது. 

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவரின் முழுநேர வேலையே சமூக வலைதளங்களில் உலா வருவது தான்... 

அப்படி இன்ஸ்டாகிராமில் அறிமுகமானவர் தான் சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி. நட்பாக பழகிய மாணவியிடம் ப்ளே பாயான அருண் கிறிஸ்டோபர் காதல் வலை வீச, மாணவியும் ஒரு கட்டத்தில் காதலில் விழுந்துள்ளார். 

நெருங்கிப் பழகிய இவர்களின் பேச்சு, ஒரு கட்டத்தில் நிர்வாண படங்களை அனுப்பும் அளவுக்கு நீண்டுள்ளது. இதையெல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அருண் கிறிஸ்டோபர், மாணவியை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். 

மாணவியின் தோழிகளிடம் அத்துமீற இந்த இளம்பெண்ணையே பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டார் அருண் கிறிஸ்டோபர். இதற்கெல்லாம் அந்த பெண் மறுக்கவே, நிர்வாண படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டியிருக்கிறார். 

பயந்து போன மாணவியும் தன் தோழிகளின் செல்போன் எண்கள் மட்டுமின்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஐடி மற்றும் பாஸ்வேர்டையும் கொடுத்துள்ளார். ஆனால் அருண் கிறிஸ்டோபரோ, இளம்பெண்ணின் கணக்கில் இருந்து மற்ற பெண்களை தொடர்பு கொண்டுள்ளார். 

பெண் தானே என நினைத்து மற்ற பெண்களும் பேச, ஒரு கட்டத்தில் ஓரின சேர்க்கைக்கு அழைப்பு விடுப்பது போல பேசி அதில் இணங்கிய பெண்களின் புகைப்படங்கள் மற்றும் நிர்வாண வீடியோக்களையும் பெற்றிருக்கிறார் அருண் கிறிஸ்டோபர். 

இந்த பிரச்சினை எல்லாம் பூதாகரமாகி கடைசியில் அருண் கிறிஸ்டோபர் கைதான பிறகு தான் இன்ஜினிரியங் மூளையை பயன்படுத்தி பல தகிடுதத்தங்கள் செய்தது அம்பலமானது. அவருடைய செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

தன்னுடைய செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள ரகசியங்களை யாரும் பார்க்காமல் இருப்பதற்காக EC wallet என்னும் செயலியை பயன்படுத்தி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. CLOUD stroage என்ற செயலியிலும் ஏராளமான ஆபாச படங்களை சேமித்து வைத்துள்ளார் அருண் கிறிஸ்டோபர்.  இந்த விவகாரத்தில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் உள்ள பெண்களே தொடர்ச்சியாக குறிவைக்கப்படுவதை உணர்த்தியிருக்கும் இந்த சம்பவம் பலருக்கு பாடமும் கூட... 

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

505 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

184 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

104 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

86 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

52 views

பிற செய்திகள்

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

14 views

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.

19 views

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

42 views

தமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

27 views

நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

25 views

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

119 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.