தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி
தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்டண நிர்ணய குழு பரிந்துரைத்த கட்டணங்களுக்கும், அரசு வெளியிட்டுள்ள கட்டணங்களுக்கும் முரண்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் முதல், 4 லட்சம் ரூபாய் வரை கட்டணத்தை நிர்ணயக் குழு நிர்ணயித்தது. ஆனால் தமிழக அரசு, ஒரு கல்லூரிக்கான கட்டணத்தை அதிகபட்சமாக 4 லட்சத்து 15 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. இதுதவிர, சில கல்லூரிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Next Story