3 மற்றும் 15 வயது சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை - பேய் விரட்டுவதற்காக தாய் அழைத்துச் சென்ற போது நடந்த கொடூரம்
பதிவு : நவம்பர் 19, 2020, 09:28 AM
ராசிபுரம் அருகே பேய் விரட்டுவதாக கூறி ஒரு வாரத்திற்கும் மேலாக சிறுமிகளிடம் அத்துமீறிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பறவைக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதியருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன். விவசாய கூலித் தொழிலாளிகளான பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் ஊரடங்கால் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். 

13 மற்றும் 15 வயதான மகள்கள் 2 பேரும் பெற்றோருடன் சேலம் அருகே வேலை பார்க்கும் இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது நிலத்தின் உரிமையாளரான 50 வயதான நபர், சிறுமிகள் 2 பேரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிகள் 2 பேரும் பிரமை பிடித்தது போல இருக்கவே, பயந்து போனார் தாய். 

பேய் பிடித்திருக்கலாம் என்ற அச்சத்தில் இருந்த அந்த தாய், மகள்களிடம் எதுவும் கேட்காமலேயே மங்களபுரம் பகுதியில் உள்ள மந்திரவாதி சேகரிடம் தன் மகள்களை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமிகளுக்கு பேய் பிடித்திருக்கிறது என கூறி நம்ப வைத்த மந்திரவாதி சேகர், தோஷம் கழிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். 

பின்னர் சிறுமிகள் 2 பேரையும் தனியே அழைத்துச் சென்று அத்துமீறியிருக்கிறார். ஒரு வாரம் அவர்களை அங்கேயே தங்க வைத்தால் தான் தோஷம் கழிக்க முடியும் கூறிய மந்திரவாதியின் பேச்சை நம்பி சிறுமிகளை அங்கேயே விட்டு விட்டு வந்துள்ளார் தாய். 

ஒரு வாரமாக சிறுமிகளிடம் மந்திரவாதி அத்துமீறலை துணிச்சலுடன் தொடர்ந்துள்ளார். ​நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார் அவர். கடைசியில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை சிறுமிகள் பெற்றோரிடம் சொல்லவே, மங்களபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து மந்திரவாதி சேகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சிறுமிகள் 2 பேரும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகள் அளிக்கும் தகவலின் பேரில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடரலாம் என கூறப்படுகிறது. 

அதேநேரம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்களின் 17 வயதான மூத்த மகளை மந்திரவாதியின் உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதன்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அறியாமையும் மூடநம்பிக்கையும் இன்று சிறுமிகளின் வாழ்க்கையை சிதைத்து போட்டிருக்கிறது... 

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

15 views

பிற செய்திகள்

காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

182 views

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3465 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4735 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.