சாலை விபத்தில் உயிரிழந்த எதிர்வீட்டு இளைஞர் : சோகத்தில் 45 வயதான பெண் தற்கொலை - 2 குழந்தைகள் தவிப்பு
பதிவு : நவம்பர் 19, 2020, 09:15 AM
கோவையில் இளைஞர் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் எதிர் வீட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் 2 குழந்தைகள் தாயில்லாமல் தவிக்கின்றன.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 29 வயதான மகன் துரைக்கண்ணன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞரின் உடல் சுடுகாட்டில் அடக்கம்  செய்யப்பட்டது. உறவினர்கள் எல்லாம் வீடு திரும்பிய நிலையில் துரைக்கண்ணனின் எதிர்வீட்டில் வசிக்கும் 45 வயதான ஜெகஜோதி என்ற பெண், சுடுகாட்டிற்கு சென்றுள்ளார். 

துரைக்கண்ணனை புதைத்த குழியை அவர் தோண்டி கொண்டிருக்கவே, அதை பார்த்த சிலர் துரைக்கண்ணனின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஜெகஜோதியை எச்சரித்துவிட்டு மீண்டும் குழியை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

ஆனால் அதன்பிறகு ஜெகஜோதி பாப்பம்பட்டியில் உள்ள தன்னுடைய பாழடைந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதற்கு முன்பாக அவர் சாணிப்பவுடரை கலந்து குடித்துவிட்டு தூக்கில் தொங்கியதும் தெரியவந்தது. 

ஜெகஜோதியின் இந்த செயல் பலருக்கும் சந்கேதத்தை ஏற்படுத்தவே, போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது தான் திடுக்கிடும் அந்த தகவல் வெளியானது. ஜெகஜோதிக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கணவரை பிரிந்து தன் குழந்தைகளுடன் வாழும் ஜெகஜோதிக்கு எதிர்வீட்டில் வசித்த துரைக்கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஊரில் யாருக்கும் தெரியாமல் இவர்களின் ரகசிய உறவு தொடர்ந்த நிலையில் காதலன் மறைவை தாங்க முடியாமல் ஜெகஜோதி விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார். தன் 2 பிள்ளைகளின் எதிர்காலம் கூட நினைவுக்கு வராத அளவிற்கு காதல் சோகத்தில் மூழ்கியிருந்த பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

இருவரும் உயிருடன் இருந்த போது யாருக்கும் தெரியாத இந்த தகவல்கள் எல்லாம் உயிரிழந்ததற்கு பின் தெரியவரவே, இருதரப்பு உறவினர்களும் மீள முடியாத அதிர்ச்சியில் உள்ளனர்.... 

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

503 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

181 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

101 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

83 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

51 views

பிற செய்திகள்

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

92 views

தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா - மதுரை மாவட்டம் யாருக்கு சாதகம்?

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகள், அங்கு போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், எந்த கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளது என்பது பற்றி விரிவாக அலசுகிறது, இந்த சிறப்பு தொகுப்பு...

228 views

"உதயநிதியின் கபடநாடகம் ஒருபோதும் எடுபடாது" - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து

திமுக தேர்தல் பரப்புரை என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றும், அது ஒருபோதும் எடுபடாது என்றும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்

143 views

சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

23 views

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

84 views

"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

361 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.