இளைஞரின் தலையை துண்டித்து கொன்ற கும்பல் - தலையை தேவாலய வாசலில் வீசிச் சென்ற பயங்கரம்
பதிவு : நவம்பர் 16, 2020, 04:31 PM
மதுரையில் நடந்த கொடூர கொலை சம்பவத்தில் எதிரி என நினைத்து தவறுதலாக இளைஞர் ஒருவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூங்கா நகரமான மதுரை இப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு ஊராக மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் நடக்கும் கொடூர கொலைகளால் போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை. அப்படி ஒரு சம்பவம் தான் மதுரை கீழ வெளி பகுதியில் நடந்திருக்கிறது... 

அதிமுக பிரமுகரான மறைந்த ராஜபாண்டி குடும்பத்தினருக்கும், திமுக பிரமுகர் வி.கே.குருசாமிக்கும் இடையே பல ஆண்டு கால முன்பகை. இவர்களின் பகை இதுவரை 15 உயிர்களை குடித்திருக்கிறது. இந்த வரிசையில் மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த 16வது கொலை படுபயங்கரம்... 

அடுத்தடுத்த கொலைகள் இருதரப்பிலும் நடந்தாலும் கூட, எதிரிகளை எப்போதும் பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கமே இரு தரப்புக்கும் இருந்துள்ளது. அப்படி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி கொலைகளும் அரங்கேறி வந்தது. சம்பவத்தன்று திமுக பிரமுகர் குருசாமியின் தரப்பை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜபாண்டி தரப்பை சேர்ந்தவர்களை மிரட்டுவதற்காக சென்றுள்ளது. 

அப்போது கீழவெளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் முனியசாமியை அந்த கும்பல் துரத்தவே, அவர்கள் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் இவர்களுடன் நடந்து  சென்ற உத்தங்குடியை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை காரில் வந்த கும்பல் சுற்றி வளைத்தது. ஆனால் அவரோ இந்த கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என்பதை அறியாத அந்த கும்பல், எதிராளி என நினைத்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்றது. 

பின்னர் அவரின் தலையை துண்டாக வெட்டி எடுத்து அந்த பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வீசிச் செல்லவே பதற்றம் அதிகமானது. மேலும் கைகள், கால்கள் உள்ளிட்ட இடங்களையும் கொடூரமாக கொத்தி வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த முருகானந்தம், காவல்துறை தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. 

போக்குவரத்து சிக்னல் அருகே நடந்த இந்த கொலையில் கொலையாளிகள் யார் என சிசிடிவி கேமராவில் தெளிவாக தெரியவந்தது. இதையடுத்து வி.கே.குருசாமியின் ஆதரவாளர்களான சின்ன அலெக்ஸ், அழகுராஜா உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த இரு தரப்புக்கு இடையே 15 உயிர்கள் பலியாகி இருந்தாலும் கூட, தொடரும் கொலைகளுக்கு எப்போது விடிவுகாலம் கிடைக்கும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பு.....

தொடர்புடைய செய்திகள்

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

110 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

89 views

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

75 views

பிற செய்திகள்

புறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

35 views

"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

100 views

"நிவர் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பொது மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்

23 views

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

34 views

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.

31 views

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரம்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.