தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,10,44,358

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 என வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,10,44,358
x
மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370 ஆகவும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603 ஆகவும் உள்ளனர். மூன்றாம் பாலின  வாக்காளர்கள் 6 ஆயிரத்து 385 என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
மாநிலத்தில் மொத்தமாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 413 பேர் புதிதாக வாக்காளர் பட்டியல் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து ஆயிரத்து 700, பெண் வாக்காளர்கள்  1 லட்சத்து 6 ஆயிரத்து 581 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 132 ஆகும்.

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்டம் வாரியாக புதிய வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. அத்தொகுதியில்,  6 லட்சத்து 55 ஆயிரத்து 366 வாக்காளர்கள் உள்ளனர் என தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்