சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய திட்டம் - தமிழக அரசு திடீர் முடிவு என தகவல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய திட்டம் - தமிழக அரசு திடீர் முடிவு என தகவல்
x
 பதவியில் இருந்து கொண்டு முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை எதிர்கொள்வது சரியாக இருக்காது என கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் துணைவேந்தர், பதிவாளர் உட்பட பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன், இன்று தனது பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்   பொறுப்பை ஏற்கிறார் எனக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு நீதிபதி கலையரசன் மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிப்பார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்