திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவக்கம்

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவக்கம்
x
அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஷ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்டம் அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன், கந்தசஷ்டி விழாவை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். வரும் 26ஆம் தேதி வரை மொத்தம் 12 நாள் கந்தசஷ்டி விழா நடைபெறும். சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்பட உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்