இரும்பு கேட்டை திறந்து ஊருக்குள் நுழைந்த காட்டு யானை - பட்டாசு வெடித்து விரட்டியடித்த வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்கா அருகே இரும்பு கேட்டை திறந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்கா அருகே இரும்பு கேட்டை திறந்து, ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க வருவதோடு, அணையை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி நுழைந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள புங்கார் பழத்தோட்ட நுழைவு வாயிலின் இரும்பு கேட்டை திறந்து, சாலைக்கு வந்தது.
இதனைக் கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டி அடித்தனர்.
Next Story