சென்னை யானைக்கவுனி பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - தனிப்படை அதிரடி
பதிவு : நவம்பர் 14, 2020, 01:45 PM
சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை பிடிக்கத் தனிப்படை சத்தீஸ்கர் விரைந்துள்ளது.
சென்னை யானைகவுனியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் இறந்த சீத்தலின் மனைவி ஜெயமாலாவின் சகோதாரர் கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத் ஆகியோரை புனேவில் வைத்து தனிப்படை கைது செய்தது. அவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், பல திடுக்கிடும் தகவல்களை கைலாஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜெயமாலாவின் சகோதரர், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் தங்கி துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் கள்ள சந்தையில் சப்தம் குறைவாக வரும் சில துப்பாக்கிகளை வாங்கி வந்து பயிற்சி மேற்கொண்டதாக கைலாஷ் போலீஸிடம் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முன்னாள் ராணுவ அதிகாரியின் கார் என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் வேறு யாருடன் கைலாசுக்கு தொடர்பு உள்ளது, கள்ளத்துப்பாக்கி சென்னையில் வாங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இவ்வழக்கில் புதிய திருப்பமாக கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரைப் பிடிக்க தனிப்படையினர் சத்தீஸ்கர் விரைந்துள்ளனர். ஜெயமாலாவின் மற்றொரு சகோதரர் விலாஸ், அவரின் கூட்டாளி  ராஜு சிண்டே உள்பட 3 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

263 views

மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

16 views

பிற செய்திகள்

காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

204 views

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3477 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4766 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.