இளம் ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு - உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் ஏற்பு

வெலிங்டனில் கம்பீர அணிவகுப்புடன் இன்று 311 இளம் ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
இளம் ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு - உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் ஏற்பு
x
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில இளைஞர்களுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட்  ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. கடினப் பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களில் 311 பேர், சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசியக்கொடி  மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடந்தது. 


Next Story

மேலும் செய்திகள்