"இன்று முதல் ராமேஸ்வரத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படும்" - விபத்து ஏற்படுவதை தவிர்க்க 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு

பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய மிதவை, கடலில் மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிகாலை முதல் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.
இன்று முதல் ராமேஸ்வரத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படும் - விபத்து ஏற்படுவதை தவிர்க்க 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு
x
பாம்பன் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, கிரேன் மற்றும் இரும்பு மிதவை பாம்பன் பாலத்தின் 121வது தூணில் மோதியதில், மிதவை கடலுக்குள் மூழ்கியது. இதை அடுத்து, அதிகாலை 3 மணி அளவில் ராமேஸ்வரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில், பயணிகள் இன்றி  சோதனை ஓட்டமாக பாம்பன் பாலம் வழியாக மண்டபத்திற்கு  புறப்பட்டுச் சென்றது. இதைப்போல் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ், பயணிகள் அனைவரையும் மண்டபத்தில் இறக்கிவிட்ட பின்னர், பயணிகள் இன்றி பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் வந்தடைந்தது. இந்நிலையில், இன்று வழக்கம் போல் ராமேஸ்வரத்திலிருந்து ரயில்கள் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீண்டும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க பாம்பன் பாலத்தில் 24 மணிநேர கண்காணிப்பில்  ஈடுபட இரண்டு ஊழியர்களை கட்டுமான நிறுவனம் நியமித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்