கன்னியாகுமரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் - நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார், முதலமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், சுமார் 60 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பில் 36 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், 153 கோடியோ 92 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இது தவிர, 54 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பில் 2, ஆயிரத்து 736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
Next Story