ரத்தம் மாற்றி ஏற்றியதால், எச்.ஐ.வி. பாதிப்பு - பெண்ணுக்கு ஸ்கூட்டர் வழங்க உத்தரவு

ரத்தம் மாற்றி ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ஸ்கூட்டர் வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ரத்தம் மாற்றி ஏற்றியதால், எச்.ஐ.வி. பாதிப்பு - பெண்ணுக்கு ஸ்கூட்டர் வழங்க உத்தரவு
x
ரத்தம் மாற்றி ஏற்றியதால், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு ஸ்கூட்டர் வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இருவர், அந்தப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு விசாரித்தது. 25 லட்சம் ரூபாயை அந்தப் பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில்,10 லட்சத்தை அந்தப் பெண்ணின் பெயரிலும், மீதத்தொகையை அவரது இரு மகள்களின் பெயரில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும் சுற்றுச் சுவருடன் கூடிய 450 சதுர அடிக்கு குறையாத 2 படுக்கை அறை கொண்ட வீடு கட்டிக் கொடுக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதிகள், பெண்ணுக்கு ஸ்கூட்டர் வழங்க உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்