முந்திரி வியாபாரி உயிரிழந்த சம்பவம்: நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" - உயிரிழந்தவரின் மனைவி திட்டவட்டம்
விருத்தாச்சலத்தில் சிறையில் இருந்த கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் திருப்தி இல்லை என அவரின் மனைவி குற்றச்சாட்டு முன்வைத்தார்.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் மாஜிஸ்திரேட் ஆனந்தும் விசாரணை நடத்தி வருகிறார். ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணையில் திருப்தி இல்லை என தெரிவித்துள்ள செல்வமுருகனின் மனைவி பிரேமா, கணவர் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Next Story