தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
கொரோனா முன் கள பணியாளர்களான கிராம சுகாதார செவிலியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா முன் கள பணியாளர்களான கிராம சுகாதார செவிலியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சங்கத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாலின பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை கிராம சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மகப்பேறு பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Next Story