சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய காசி - சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பகீர் தகவல்
பதிவு : நவம்பர் 09, 2020, 04:48 PM
காருக்குள் இளம்பெண்ணிடம் அத்துமீறிய நாகர்கோவில் காசி, கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் அதை பதிவு செய்து மிரட்டியதாக சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை காதலிப்பது போல நடித்து கடைசியில் அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய  நாகர்கோவில் காசி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே காசி மீது 5 பெண்கள் மற்றும் ஒரு கந்துவட்டி புகார் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காசி மீது அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் காசியை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது அவர் சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியின் உச்சம்... இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சென்னை இளம்பெண்ணிடம் நட்பாக பேச ஆரம்பித்து இருக்கிறார் காசி. இவர்களின் உரையாடல்கள் செல்போன் வரை நீளவே, ஒரு கட்டத்தில் காதல் நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார் காசி. காதலியை தேடி சினிமா பாணியில் சென்னைக்கு வந்த காசி மீது இளம்பெண்ணுக்கு நம்பிக்கை வரவே, ஒரு கட்டத்தில் காதலனை தேடி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் வைத்து அந்த மாணவியிடம் அத்துமீறியுள்ளார் காசி. நடந்த சம்பவங்களை எல்லாம் தன் கைக்கடிகாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவு செய்து கொண்ட அவர், அதை காட்டி மிரட்டியே அவரிடம் பலமுறை அத்துமீறியிருக்கிறார். ஆனால் நடந்த சம்பவங்களை எல்லாம் அந்த பெண் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்துள்ளார். காசியின் மீது பெண்கள் பலரும் புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவே, இப்போது துணிச்சலாக வெளிவந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் எல்லாம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காசி மீது மேலும் பல பெண்கள் புகார் அளிக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் உள்ளதாகவும், அதில் உள்ள பெண்களிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

270 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

223 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

169 views

பிற செய்திகள்

"ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா?" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

77 views

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த நிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த நிலை உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

418 views

போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் பணி - மோசடி செய்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரையில் போலி சான்றிதழ் கொடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

562 views

"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

220 views

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

964 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.