தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பின் நாளை திரையரங்குகள் திறப்பு

தீபாவளிக்கு புது படங்கள் எதுவும் வெளி வராத நிலையில், ஏற்கனவே ஹிட் அடித்த முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பின் நாளை திரையரங்குகள் திறப்பு
x
கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பின் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட உள்ளன. 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதுப்பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, துல்கர் சல்மானின் கண்ணும், கண்ணு​ம் கொள்ளையடித்தால், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்கள் நாளை முதல் திரையிடப்பட உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்