"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் - ராமதாஸ்
x
பாமக தொண்டர்கள் மற்றும் சமுதாய மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதற்காக, அறவழியில் போராடுவது நமது கடமை என கூறியுள்ள அவர், அதை வென்றெடுப்போம் என அழைப்பு விடுத்துள்ளார். இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியானவுடன், தேர்தல் மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக ராமதாஸ் அழைத்துள்ளதாக அவதூறு கருத்துகள் பகிரப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதுவரை நீதிபதி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும், தமிழக டி.​ஜி.பி. பதவியிலும் வன்னியர் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அவர் ​கூறியுள்ளார்.  தமிழக மக்களுக்கான உணவை அதிக அளவில் உற்பத்திச் செய்வது வன்னியர்கள்தான் என சுட்டிக்காட்டும் ராமதாஸ், பல்கலைக்கழக துணைவேந்தர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான பலர், வன்னியர் சமுதாயத்தில் இருந்தும், அவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது சமூக அநீதி என குறிப்பிட்டுள்ளார். எப்படி போராடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் தெரிவிக்குமாறும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்