"தொலைதூர படிப்பு- தமிழ்வழி கல்வி என்னென்ன?" - பல்கலைக் கழங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தொலை தூர கல்வியில் உள்ள தமிழ்வழி படிப்புகள் குறித்து, அனைத்து பல்கலைக் கழகங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்வழியில் பயின்றோருக்கான வேலை வாய்ப்பு சலுகையை முறைப்படுத்தக் கோரி திருமங்கலத்தை சேர்ந்த சக்தி ராவ் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் உள்ள காமராஜர், பாரதிதாசன், பாரதியார் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். தொலைதூர கல்வியில் உள்ள தமிழ் வழி படிப்பு குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story