தனியார் வேலைவாய்ப்புகளில் 70% இட ஒதுக்கீடு - உத்தரகாண்ட் அரசின் முடிவுக்கு ராமதாஸ் பாராட்டு

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில், உள்ளூர் மக்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரகாண்ட் அரசின் முடிவை, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
தனியார் வேலைவாய்ப்புகளில் 70% இட ஒதுக்கீடு - உத்தரகாண்ட் அரசின் முடிவுக்கு ராமதாஸ் பாராட்டு
x
தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில், உள்ளூர் மக்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரகாண்ட் அரசின் முடிவை, பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகாண்ட் அரசு விரைவில் இதற்காக சட்டம் இயற்றவுள்ளது. இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள், உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் ஒன்பதாவது மாநிலம்!" என பதிவிட்டதோடு, மண்ணின் மைந்தர்கள் என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்