கலப்பு திருமணம் செய்த மகனை பிரிக்க தந்தை செய்த சதி - காதல் மனைவியை விட்டு பிரிந்து வர பணம் கொடுக்க முயற்சி

கலப்பு திருமணம் செய்து கொண்ட மகனை, காதல் மனைவியிடம் இருந்து பிரிக்க மகனுக்கு தந்தையே பணம் கொடுக்க முயற்சித்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது
கலப்பு திருமணம் செய்த மகனை பிரிக்க தந்தை செய்த சதி - காதல் மனைவியை விட்டு பிரிந்து வர பணம் கொடுக்க முயற்சி
x
ஏதேனும் ஒரு பிரச்சினையை காரணம் காட்டி காதல் ஜோடிகளை பிரிப்பது திரைப்படத்தில் மட்டும் நடப்பதில்லை,  நிஜத்திலும் நடந்து வருவதை கண்முன்னே நிறுத்தியுள்ளது சென்னையில் நடந்த நிகழ்வு. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரன் மற்றும்  கிரேசி  இருவரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கு முன் படித்தபோது, இருவருக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு இடையே பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிரேசியை ராஜேஸ்வரன் கரம் பிடித்துள்ளார். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் இவர்களை ராஜேஸ்வரன் குடும்பத்தினர் தொந்தரவு செய்யக் கூடாது என மூன்றாண்டுகளுக்கு முன்பே மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ராஜேஸ்வரனுக்கு, கோவையை சேர்ந்த காவலர் இளையராஜா என்பவர் 5 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கான வட்டித் தொகையை ராஜேஸ்வரன் கொடுக்காததால் இளையராஜா வங்கிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்துள்ளார்,  தொடர்ந்து வற்புறுத்திய பிறகும் ராஜேஸ்வரன் பணத்தை கொடுக்காத நிலையில்,  சென்னைக்கு வந்த இளையராஜா, தனது உறவினர் வீட்டுக்கு ராஜேஸ்வரனை அழைத்துச் சென்றுள்ளார்,.அங்கு இருந்த ராஜேஸ்வரனின் தந்தை,  கடனை தான் அடைத்து விடுவதாகவும், அதற்கு பதிலாக  கிரேசியை விட்டு பிரிந்து வந்து விட வேண்டும் எனவும் மகனுக்கு கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, ரா​ஜேஸ்வரனின் செல்போன் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த கிரேசி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையில் இந்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து,  ராஜேஸ்வரன், அவரது தந்தை மற்றும் இளையராஜா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்