திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

மழையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
x
இன்று  திருவாரூர் நகர பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புலிவலம், விளமல் , மாங்குடி, வாழ வாய்க்கால், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை நீரின்றி காய்ந்து வரும் சம்பா பயிர்களுக்கும் இந்த மழை பயனளிக்கும் என விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர் மழை எதிரொலி - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 96 அடியாக குறைந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 96.20 அடியாகவும், நீர் இருப்பு 25.8 டிஎம்சி ஆகவும் உள்ளது.


மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது  

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடங்கியுள்ளது. 47 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர் வரத்து 217 கன அடியாகவும் , மொத்த நீர் இருப்பு 339 மில்லியன் கன அடியாகவும் உள்ள நிலையில், அணையில் இருந்து நீர் எதுவும் வெளியிடப்படவில்லை. 57 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்