"அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதல பாதாளத்துக்கு போய்விட்டது" - ஸ்டாலின்
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், அனைத்துத் துறைகளும், அதல பாதாளத்துக்கு போய்விட்டதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக சார்பில் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் 2021சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு பொதுக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி மூலம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, மூத்த திமுக உறுப்பினர்கள்139 பேருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை எதிர்க்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை என்று கூறினார். தி.மு.க.வின் தொடர்ச்சியான போராட்டத்தால், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமை கிடைத்துள்ளதாக கூறினார். ஒரு மசோதாவை நிறைவேற்றிவிட்டு முதலமைச்சர் சும்மா இருந்ததாகவும், அவர் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் எதிர்க்கட்சி செய்து, அனுமதியை வாங்கித் தந்ததாக கூறினார்.
Next Story