தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்
பதிவு : நவம்பர் 03, 2020, 12:52 PM
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கான இறுதி தேர்வுப் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கான எழுத்து தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வுக்கு பிறகு, வெளியான தேர்வு முடிவுகளில் தொடர்ந்து பல்வேறு குழப்பம்,  குளறுபடி நீடித்தன. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த இறுதிப் பட்டியலில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்கள் 1, 2 மற்றும் பூஜ்ஜியம் என்று பெற்றிருந்த நிலையில், 18 க்கும் மேற்பட்டோர் முழுமையான மதிப்பெண்களை பெற்று, தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதாவது ஐந்துக்கு ஐந்து என மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இதில் பல முறைகேடு நடந்து இருக்கலாம் என்றும், அதிகாரிகள் துணையில்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தேர்வர்களும், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகே பணி நியமன கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில், வெளியான இந்த தகவல் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...

3 views

'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

17 views

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி

சசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...

100 views

குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .

194 views

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

23 views

"கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது" - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.