தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்
பதிவு : நவம்பர் 03, 2020, 12:52 PM
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கான இறுதி தேர்வுப் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கான எழுத்து தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வுக்கு பிறகு, வெளியான தேர்வு முடிவுகளில் தொடர்ந்து பல்வேறு குழப்பம்,  குளறுபடி நீடித்தன. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த இறுதிப் பட்டியலில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்கள் 1, 2 மற்றும் பூஜ்ஜியம் என்று பெற்றிருந்த நிலையில், 18 க்கும் மேற்பட்டோர் முழுமையான மதிப்பெண்களை பெற்று, தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதாவது ஐந்துக்கு ஐந்து என மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இதில் பல முறைகேடு நடந்து இருக்கலாம் என்றும், அதிகாரிகள் துணையில்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தேர்வர்களும், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகே பணி நியமன கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நிலையில், வெளியான இந்த தகவல் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்

பள்ளியில் 23 இலவச மடிக்கணினிகள் மாயம் - மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் இருந்து 23 இலவச மடிக்கணினிகளை திருடி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

5 views

போலீஸ் நுழைய முடியாத இடத்தில் புகுந்த கொரோனா - நக்சல்கள் திணறல்

போலீஸ் நுழைய முடியாத இடத்தில் புகுந்த கொரோனா - நக்சல்கள் திணறல்

27 views

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 2000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கொண்டு சென்ற பரத்சிங் என்பவர் சிக்கினார்.

11 views

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சரவை கூட்டத்திற்கு பின், சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

17 views

தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு

28 views

தமிழக மின்துறை நிறுவனங்கள் 2018-19-ம் ஆண்டில் ரூ.13,176 கோடி இழப்பு - காரணம் என்ன ?

தமிழக மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19-ம் ஆண்டில் அரசுக்கு 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.