155வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சேலம்

ஒரு நகரில் இத்தனை சிறப்புக்கள் இருக்குமா என, ஆச்சரியப்படுத்தும் சேலம் மாநகர் இன்று 155வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..
155வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சேலம்
x
தமிழகத்தில்,1866 ஆம் ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதி, சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. தமது 155வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது சேலம். 1994ஆம் ஆண்டுமுதல் மாநகராட்சியாக சேலம், செயல்பட்டு வருகிறது.

சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம், பின்னர் மைசூர் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. போரில் தோற்ற திப்புசுல்தானிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி சேலம், கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. ஆனால், 11ஆம் நூற்றாண்டிலேயே 'சேலம்' என்ற பெயர் வழக்கில் இருந்துள்ளது. 

அன்றைய முதலமைச்சர் ராஜாஜி மற்றும் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழகத்திற்கு தந்தது இந்த சேலத்து மண் தான்... 

இதுமட்டுமின்றி, இன்றைய கோடம்பாக்கத்தை விட அன்றைய சேலம் 'மாடர்ன்' தியேட்டர் எண்ணிலடங்கா பல கலைஞர்களை, அரசியல் ஜாம்பவான்களை தந்தது...

Next Story

மேலும் செய்திகள்