பைக் டாக்ஸியில் சென்றவரிடம் நடுவழியில் செல்போன் பறிப்பு - ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள போனை பறித்துச் சென்ற நபர்

சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற இளைஞரை நடுவழியில் மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பைக் டாக்ஸியில் சென்றவரிடம் நடுவழியில் செல்போன் பறிப்பு - ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள போனை பறித்துச் சென்ற நபர்
x
கால் டாக்ஸி சேவை போலவே சென்னையில் பைக் டாக்ஸி சேவையும் பிரசித்தம். உரிய இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என விரும்புவோர் பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்தி வந்தனர். குறைந்த விலையில் இந்த சேவை கிடைப்பதால் கணிசமானோர் இந்த பைக் டாக்ஸி வாடிக்கையாளர்களாக இருந்தனர். 

செல்போன் ஆப் மூலம் புக் செய்தால் போதும்.. இருசக்கர வாகனத்தில் வரும் நபர் சேர வேண்டிய இடத்திற்கு வாடிக்கையாளரை அழைத்துச் செல்வார். அப்படி அவசர தேவைக்காக பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார் சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த கேசவ தன்ராஜ். இவர் பெரம்பூரில் உள்ள தன் நண்பரை பார்ப்பதற்காக பைக் டாக்ஸி சேவையை இரவில் புக் செய்துள்ளார். அப்போது அவரை பிக் அப் செய்வதற்காக இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இருவரும் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெரம்பூர் அருகே வாகனத்தை நிறுத்தியிருக்கிறார் ஓட்டுநர். 

அப்போது திடீரென கேசவ தன்ராஜை தாக்கி அவரிடம் இருந்த 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை அந்த ஓட்டுநர் பறித்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவதன்ராஜ் ஐசிஎப் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து பைக் டாக்ஸியை ஓட்டி வந்த ஓட்டுநர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாகவே பைக் டாக்ஸி குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த நிலையில் இப்போது இந்த சம்பவமும் நடந்தேறி இருக்கிறது. கால் டாக்ஸி ஊழியர்கள் நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி இருந்த நிலையில் அதனை கடுமையாக்கினால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்