நவ. 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவ. 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
x
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், நவம்பர்16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி விடுதிகள், பணியாளர் விடுதிகள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட
வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் 150 பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல் கூட்டங்கள், விழாக்களில்100 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 பேர் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சென்னையில் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்