7.5% உள் ஒதுக்கீடு : "முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
7.5% உள் ஒதுக்கீடு : முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்கான முழு உரிமை அதிமுகவைதான் சேரும், அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என கூறியுள்ளார். மேலும், இதன் மூலம், தமிழகத்துக்கு என உள்ள 4,043 மருத்துவ இடங்களில், 303 மருத்துவ இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்றார். அத்துடன் ஓரிரு நாட்களில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்துடன் கூடிய தகவல் தொகுப்பு வழங்கப்பட்டு, அதன் பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்