நெல்லையப்பர் கோவில் திருவிழாவை நடத்த முடிவு - பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை

பக்தர்களின் போராட்டத்தை அடுத்து நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லையப்பர் கோவில் திருவிழாவை நடத்த முடிவு - பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை
x
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும்  சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருந்த நிலையில், கொரோனாவை காரணம் காட்டி விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இன்றும் திருவிழா தொடர்பாக எந்தஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், அம்மன்சன்னதி முன்பு  அமர்ந்து பாராயணம் செய்யப்போவதாக பக்தர்கள் அறிவித்தனர். இதற்கு அதிமுக, திமுக, பாஜக கட்சிகளும் ஆதரவு தெரிவித்து தொண்டர்கள் கோவில் முன்பாக திரண்டனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இடைய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் யாருக்கும் அனுமதிகிடையாது எனவும் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்