பாம்பன் பாலத்தில் கிரேன் மோதல்: சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் நிறுத்தம்

பாம்பன் பாலத்தில் கிரேன் மோதியதால் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அதிவிரைவு ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது.
x
பாம்பன் புதிய பாலம் அமைக்கும் பணிக்காக இரும்பு மிதவைகளில் கிரேன் அமைக்கப்பட்டு பாம்பன் தூக்கு பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீசிய பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மிதவை மற்றும் அதிலிருந்த கிரேன் பாம்பன் தூக்கு பாலத்திற்கு மிக அருகில் உள்ள ரயில் பாலத்தில் மோதியது. இதனால்  சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அதிவிரைவு ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து  பாம்பன் ரயில் பாலத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த ரயில்வே பொறியாளர்கள், கிரேனை  படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைபோல் தூக்கு பாலத்தில் இருந்து சற்று தூரத்தில் மற்றொரு மிதவை கிரேனும் பாலத்தில் மோதும் தருவாயில் உள்ளதை அடுத்து, அதனை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள்  மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்