ஏரிகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை - கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

மழையால் பாலாற்றில் நீர் பெருக்கெடுத்துச் சென்றாலும், வாணியம்பாடி பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ஏரிகள் வரண்டு கிடப்பதால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏரிகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை - கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
x
தற்போது பெய்த மழையால் பாலாற்றில் நீர் செல்கிறது. ஆனால்,  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள உதயேந்திரம் ஏரி, நாகலேறி மற்றும் பள்ளிப்பட்டு ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட செல்லாத நிலை உள்ளது. ஏரிக்கு நீர்வரும் வரத்துக்கால்வாய் புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும், திடக்கழிவுகள் கொட்டப்பட்டும், கழிவுநீர் கலக்கப்பட்டும் கால்வாய் சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளதால் நீர்வராத அவல நிலைக்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  உதயேந்திரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்ட நூற்றாண்டு பழமையான கால்வாயில் இடர்கள் ஏற்படவும்,  ஜாபராபாத் பகுதியில் புதிய தடுப்பணை கட்டி கால்வாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், ஏரிக்கு நீர் வரவில்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பாலாற்று தடுப்பணை உயரத்தை உயர்த்தி, கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு நீர் கொண்டுவரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்