கொத்தடிமைகளாக பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள்? - ஜார்கண்ட் மாநில அரசு புகாரின் பேரில் விசாரணை

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் 120 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வந்த புகாரையடுத்து, அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொத்தடிமைகளாக பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள்? - ஜார்கண்ட் மாநில அரசு புகாரின் பேரில் விசாரணை
x
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 120 தொழிலாளர்கள், தமிழகத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்க்கிறார்கள் என அம்மாநில அரசு தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தது. இதையடுத்து, திருவள்ளூர் தொழிலாளர் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், செங்குன்றம் மொண்டியம்மன் நகரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். 

அங்கிருந்த சதீஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில், வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், முறையாக இ-பாஸ் பெற்று தொழிலாளர்களை வர வைத்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கொரோனா காலத்தில் பரிசோதனை இன்றி தொழிலாளர்களை அழைத்து வந்தது, வேலைவாய்ப்புக்கான முறையான உரிமங்கள் இல்லாதது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தொழிலாளர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி, காளஹஸ்தியில் வேலைபார்ப்பதாக சதீஷ் கூறியதால், அங்கும் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்